செய்திகள்

உத்தரப்பிரதேசம் - கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு

Published On 2018-07-31 02:30 GMT   |   Update On 2018-07-31 02:30 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 4 தினங்களாக பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. #UPRain
லக்னோ:

பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பெய்த மழையால் வெள்ளக் காடானது.

வெள்ளத்தில் சிக்கிய வீடுகள் இடிந்தும், இடி, மின்னல் தாக்கியும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இதுவரை 70 பேர் பலியாகினர்.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் சஹரான்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர்.



இதையடுத்து, உபி கனம்ழையில் சிக்கி பலியானவ்ர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. வீடு இழந்தவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து வருகிறோம் என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். #UPRain

Tags:    

Similar News