செய்திகள்

ரெயில்வே ஓட்டல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்

Published On 2018-07-30 21:21 GMT   |   Update On 2018-07-30 21:21 GMT
ரெயில்வே ஓட்டல் வழக்கு தொடர்பாக 1-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு லாலு பிரசாத் யாதவிற்கு டெல்லி கோர்ட்டு சம்மன் வழங்கியுள்ளது. #LaluPrasadYadav #RailwayHotelTender
புதுடெல்லி:

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை தனியாருக்கு வழங்கியதில் ஊழல் நடந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது.

இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி.யின் அப்போதைய அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இதில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதாக அதில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் முன்னாள் ரெயில்வே வாரிய உறுப்பினர் அகர்வால் உள்ளிட்டோருக்கு நீதிபதி அரவிந்த் குமார் நேற்று சம்மன் அனுப்பினார்.  #LaluPrasadYadav #RailwayHotelTender #tamilnews
Tags:    

Similar News