செய்திகள்
பீஜிங் குண்டு வெடிப்பு - இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாக சுஷ்மா சுவராஜ் டுவிட்
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இந்திய தூதரகம் அருகே வெடிகுண்டு வெடித்த நிலையில், இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். #ChinaExplosion #SushmaSwaraj
பீஜிங்:
சீனா தலைநகர் பீஜிங்கின் புறநகர்ப் பகுதியான சோயாங் மாவட்டத்தில் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதி உயர் பாதுகாப்பு மிகுந்த பகுதியாகும்.
இதற்கிடையே, நேற்று மதியம் இந்தியா மற்றும் அமெரிக்க தூதரக அலுவலகங்களுக்கு மிக அருகாமையில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. கரும்புகை மூட்டமும் எழுந்தது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
விசா விண்ணப்பங்கள் வழங்குவதற்காக பொதுமக்கள் காத்திருந்த பகுதிக்கு அருகில் குண்டு வெடித்ததாகவும், தாக்குதல் நடத்தியவர் மட்டும் காயமடைந்தார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பீஜிங்கில் இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பீஜிங்கில் குண்டு வெடிப்பு என்ற செய்தியை அறிந்தேன். அங்குள்ள தூதரகத்தை தொடர்பு கொண்டேன். யாரும் கவலைப்பட வேண்டாம். அனைத்து இந்தியர்களும் பத்திரமாக உள்ளனர் என பதிவிட்டுள்ளார். #ChinaExplosion #SushmaSwaraj