செய்திகள்

சிறார் பாலியல் வன்கொடுமை சட்டத்தில் கைதான பெண்ணுக்கு ஜாமின் மறுப்பு

Published On 2018-07-23 17:49 IST   |   Update On 2018-07-23 17:49:00 IST
17 வயது மாணவனை தனது பாலியல் தேவைக்கு பயன்படுத்திய 26 வயது பெண்ணை ஜாமினில் விடுதலை செய்ய சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் தன்னிடம் படித்துவந்த 17 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாக ஷ்ருஸ்ட்டி அசோக் காம்பிளே(26) என்ற பெண்ணை கைது செய்த போலீசார் சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு (POCSO) சிறையில் அடைத்துள்ளனர்.

சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஒருவரை ஊடுருவி பாலியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்துபவர் என்று ஆண்பாலில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெண்ணுக்கு பொருந்தாது. எனவே என்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஷ்ருஸ்ட்டி அசோக் காம்பிளே மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சிறப்பு நீதிபதி பராலியா முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. அவருக்கு ஜாமின் அளிக்க மறுத்த நீதிபதி சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

‘போக்ஸோ’ சிறப்பு சட்டத்தில் அவன் என்றோ அவள் என்றோ குறிப்பிடப்படவில்லை. பாலியல் ரீதியாக அத்துமீறும் ‘நபர்’ என்று மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

நபர் என்னும் சொல் ஆண்களை மட்டுமே குறிக்கும் சொல் அல்ல. இந்த சட்டம் பாலியல் ரீதியாக அத்துமீறும் அனைத்து பாலினத்தவர்களுக்கும் பொதுவானது. இந்த சட்டமானது குற்றம்செய்யும் ஆண், பெண் இருபாலர்களுக்குமே பொருந்தும்.

இந்த வழக்கை பொருத்தவரை பாதிக்கப்பட்ட மாணவனின் ஆசிரியையாக - அதிகாரம் செலுத்தக்கூடிய இடத்தில் இருந்த குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர், தனது தகுதியை பயன்படுத்தி, துஷ்பிரயோகமாக அந்த சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். எனவே அவரை ஜாமினில் விடுதலை செய்ய முடியாது.

இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளார். #Courtrejectsbailplea #womanarrestedunderPOCSO
Tags:    

Similar News