செய்திகள்

பசுவை காப்பதில் மும்முரம் - வாலிபரின் உயிரை காப்பாற்ற தவறிய ராஜஸ்தான் போலீசார்

Published On 2018-07-23 16:16 IST   |   Update On 2018-07-23 16:16:00 IST
ராஜஸ்தானில் பசுக்களை கடத்துவதாக கூறி தாக்கப்பட்ட வாலிபரை காப்பாற்றாமல் அம்மாநில போலீசார் பசுவை பாதுகாப்பதிலேயே தீவிரமாக இருந்ததால் வாலிபர் உயிரிழந்தது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. #CowLynching
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆழ்வாரில் இறைச்சிக்காக பசுவை கடத்தியதாக வாலிபர் ஒருவரை கும்பல் ஒன்று அடித்து கொன்றது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆழ்வார் பகுதியில் உள்ள லாலாவாண்டி காட்டுப் பகுதியில் பசுக்களை கடத்தியதாக கூறி ரக்பர்கான் என்ற வாலிபர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் வாலிபர் ரக்பர்கான் உயிரை காப்பாற்ற போலீசார் தவறியதால் தான் அவர் பலியாக நேரிட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது. 4 மணி நேரமாக அவருக்கு எந்த மருத்துவ உதவியும் வழங்காததால் அவர் இறந்து உள்ளார்.


சம்பவம் நடந்த இடத்துக்கு ராம்நகர் போலீசார் வந்தனர். அவர்கள் படுகாயத்துடன் இருந்த வாலிபரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதில் அக்கரை காட்டவில்லை.

பசுக்களை கோஷாலாவுக்கு கொண்டு செல்வதில்தான் முன்னுரிமை கொடுத்தனர். படுகாயத்துடன் இருந்த வாலிபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் அக்கரை செலுத்தவில்லை. 3 மணி 45 நிமிடம் கழித்துதான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த வாலிபரை 6 கிலோ மீட்டர் தொலையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீசாரின் இந்த தாமதத்தால் அந்த வாலிபர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

வாலிபரை அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக 3 பேர் கைதாகி உள்ளனர். #CowLynching
Tags:    

Similar News