செய்திகள்

கோவாவில் வெளி மாநில மீன்களுக்கு 15 நாள் தடை- முதல் மந்திரி பாரிக்கர்

Published On 2018-07-19 06:37 GMT   |   Update On 2018-07-19 06:37 GMT
மீன்களை பதப்படுத்த பார்மலின் என்ற வேதிப் பொருட்களை பயன்படுத்துவதாக சர்ச்சை எழுந்ததையடுத்து கோவாவில் வெளி மாநில மீன்களுக்கு 15 நாள் தடை விதித்து அம்மாநில முதல்- மந்திரி பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார். #ManoharParrikar
பனாஜி:

மீன்களை பதப்படுத்த பார்மலின் என்ற வேதிப் பொருட்களை பயன்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது.

மருத்துவமனை பிணவறையில் உடல்கள் அழுகி போகாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் பார்மலினை மீன் பதப்படுத்த பயன்படுத்துவதால் மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியது.

கோவா மாநிலத்திலும் இந்த சர்ச்சை எழுந்தது. இதைதொடர்ந்து அந்த மாநிலத்தில் 15 நாட்களுக்கு மீன் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து கோவாவிற்கு விற்பனைக்கு செல்லும் மீன்களில் பார்மலின் எனும் ரசாயன திரவத்தால் பாதுகாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31-ந்தேதி வரை வெளி மாநில மீன்களுக்கு தடை விதித்து மாநில முதல்- மந்திரி மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார்.



இது தொடர்பாக மேலும் அவர் கூறும் போது ஆகஸ்டு 1-ந்தேதி பிறகு மீன் விற்பனை இயல்பாக இருக்கும் இந்த தடையால் கோவாவில் மீன் தட்டுப்பாடு பிரச்சினை எதுவும் வராது என்றார். #ManoharParrikar
Tags:    

Similar News