செய்திகள்

சத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் - 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு

Published On 2018-07-19 03:44 GMT   |   Update On 2018-07-19 03:44 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பெண்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளின் ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

அவ்வகையில், தண்டேவாடா-பிஜப்பூர் எல்லையில் உள்ள டைம்னார் வனப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் படை மற்றும் அதிரடிப் படை வீரர்கள் இன்று காலை ரோந்து சென்றனர். அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இரு தரப்பிற்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் சில மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.



அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 3 பெண்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அங்கு சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #ChhattisgarhEncounter #NaxalsKilled
Tags:    

Similar News