செய்திகள்

கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒரு லட்சம் நிதி - ஜார்க்கண்ட் அரசு

Published On 2018-07-10 23:48 GMT   |   Update On 2018-07-10 23:48 GMT
கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. #KailashMansarovarYatra
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல் மந்திரி ரகுபர் தாஸ் தலைமை தாங்கினார். அப்போது கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், முதல் மந்திரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் சுற்றுலா துறையிடம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும்.

அந்த படிவங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும், கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றார். #KailashMansarovarYatra
Tags:    

Similar News