செய்திகள்

வேலைக்கு வராத பெட்ரோல் பங்க் ஊழியரை கட்டி வைத்து சவுக்கால் அடித்த உரிமையாளர்- வீடியோ

Published On 2018-07-06 10:38 IST   |   Update On 2018-07-06 10:38:00 IST
மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து லீவு போட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை கட்டி வைத்து சவுக்கால் அடித்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். #OwnerWhipsEmployee
போபால்:

மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர் 5-6 நாட்களாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் அந்த ஊழியரை வரவழைத்து திட்டி அடித்துள்ளார். அத்துடன் விடாமல், கட்டி வைத்து சவுக்கால் அடித்துள்ளார். 

ஊழியரை அடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர், ஊழியரை பில்லரில் கட்டி வைத்து அடிக்கிறார். உரிமையாளரின் நண்பரும் உடன் இருக்கிறார். அப்போது, அந்த ஊழியர் விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டதால் 5-6 நாட்களாக வேலைக்கு வரமுடியவில்லை, என்று கூறுகிறார். 

எனினும் அவர் கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ளாத உரிமையாளர், காலில் அடிபட்டால் என்ன, கூப்பிட்டால் வரமுடியாதா? என்று கேட்டு தொடர்ந்து அடிக்கிறார்.  ஊழியரை தாக்கியது தொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். #OwnerWhipsEmployee

Tags:    

Similar News