செய்திகள்
மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க யாத்திரை செல்பவர்கள் மோசமான வானிலை காரணமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #AmarnathYatra
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இந்த ஆண்டு தோன்றியுள்ள பனி லிங்கத்தை இதுவரை 60 ஆயிரத்து 752 பக்தர்கள் தரிசித்துள்ளனர். இன்னும், 27 ஆயிரத்து 426 பேர் ஜம்மு முகாமில் காத்து இருக்கின்றனர்.
இதற்கிடையே மோசமான வானிலை மற்றும் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் முகாமில் இருந்து நேற்று புறப்பட்ட 1798 பேரும் தற்போது உதம்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டு அங்குள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வானிலை சீரானதும் யாத்திரை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.