இன்றைய ராசிபலன் 11.12.2025: இந்த ராசிக்காரர்களுக்கு தேவைகள் பூர்த்தியாகும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
இடமாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் உண்டு.
ரிஷபம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.
மிதுனம்
வள்ளல்களின் உதவி கிடைத்து வளர்ச்சி கூடும் நாள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள். வருமானம் திருப்தி தரும்.
கடகம்
இனிமையான நாள். இல்லத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர்.
சிம்மம்
குறைசொல்லியவர்கள் கூட பாராட்டுகின்ற நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறலாம்.
கன்னி
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
துலாம்
பிரச்சனைகள் அதிகரிக்கும் நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம்.
விருச்சிகம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வர்.
மகரம்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கும்பம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் சீராக நடைபெறும்.
மீனம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த நற்பலன் உண்டு. வருமானம் திருப்தி தரும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும்.