செய்திகள்

நெடுஞ்சாலை சுங்க வரியை ரத்து செய்ய முடியாது - மத்திய மந்திரி திட்டவட்டம்

Published On 2018-07-03 19:35 IST   |   Update On 2018-07-03 19:35:00 IST
நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரியை ரத்து செய்ய முடியாது என மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மும்பை:

மும்பையில் நேற்று நடைபெற்ற பிரபல செய்தி நிறுவனத்தின் தொழிற்சங்க நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பங்கேற்று பேசினார்.

கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் நடைபெற்ற 4.60 லட்சம் சாலை விபத்துகளில் 1.46 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக குறிப்பிட்ட கட்காரி, நெடுஞ்சாலைகள் வழியாக செல்லும் பயணம் பாதுகாப்பாக அமைய வேண்டியதை உறுதிப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

அதே வேளையில் நெடுஞ்சாலை விவகாரத்தில் நல்ல தரமான சேவைகள் தொடர வேண்டுமென்றால், சுங்க வரிகளை செலுத்தியே தீர வேண்டும். நெடுஞ்சாலை சுங்க வரியை ரத்து செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். #Gadkari #highwaytoll
Tags:    

Similar News