செய்திகள்

இந்தியாவில் பேசப்படும் தாய்மொழிகளின் எண்ணிக்கை 19,500 - ஆய்வில் புதிய தகவல்

Published On 2018-07-01 16:30 IST   |   Update On 2018-07-01 16:30:00 IST
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் இந்தியாவில் மொத்தம் 19 ஆயிரத்து 500 மொழிகளானது தாய் மொழிகளாக பேசப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #MothertongueinIndia
புதுடெல்லி:

பல்வேறு இன, மத, மொழியினர் வாழும் நாடுகளில் இந்தியா மிக முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ஒவ்வொரு தனி நபரின் தாய் மொழி குறித்த விவரங்களும் சேகரிக்கப்படுகிறது.

அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் மொத்தம் 19 ஆயிரத்து 569 மொழிகள் தாய் மொழிகளாக பேசப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 22 மொழிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய மக்கள் தொகையில், 96.71 சதவிகிதம் மக்கள் இந்த 22 மொழிகளையே பயன்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 121 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 10 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் உபயோகிக்கும் மொழிகளின் எண்ணிக்கை 121-ஆக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ பட்டியலில் இல்லாத மொழிகள் கடந்த 2001-ம் ஆண்டு 100 ஆக இருந்த நிலையில், 2011-ல் அது 99 ஆக குறைந்துள்ளது. #MothertongueinIndia
Tags:    

Similar News