செய்திகள்

சத்தீஸ்கரில் தலைக்கு ரூ.3 லட்சம் அறிவிக்கப்பட்ட நக்சலைட் கொல்லப்பட்டான்

Published On 2018-07-01 09:41 GMT   |   Update On 2018-07-01 09:41 GMT
சத்தீஸ்கர் மாநில அரசால் தலைக்கு 3 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட் கமாண்டரை சுக்மா மாவட்டத்தில் சிறப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #Naxalkilled #Chhattisgarhencounter
ராய்ப்பூர்:

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் உள்ள கந்தர்பாரா காட்டுப் பகுதிக்குள் நேற்று மாலை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் உள்ளூர் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த கமாண்டர் ஜக்கு என்பவனை சிறப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.  

படேஸ்ட்டி கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கிராமத் தலைவரை கொன்ற வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டுவந்த ஜக்குவின் தலைக்கு சத்தீஸ்கர் மாநில அரசு 3 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Naxalkilled  #Chhattisgarhencounter
Tags:    

Similar News