செய்திகள்

காக்கை, குரங்கு கூட்டங்கள் - எதிர்க்கட்சிகள் மீது மத்திய மந்திரி பாய்ச்சல்

Published On 2018-06-29 09:29 GMT   |   Update On 2018-06-29 09:29 GMT
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி ஒருவர் எதிர்க்கட்சிகளை காக்கை, குரங்கு கூட்டங்கள் என்று விலங்குகளுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. #AnantKumarHegde #HegdeControversy
கர்வார்:

கர்நாடக மாநிலம் கர்வார் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி ஆனந்த் குமார் ஹெக்டே கலந்துகொண்டு பேசினார். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலங்குகளுடன் ஒப்பிட்டு பேசினார்.

‘ஒருபுறம் காகங்கள், குரங்குகள், நரிகள் என பிற அனைத்தும் ஒன்றாக வருகின்றன. ஆனால், மறுபக்கம் நம்மிடம் புலி உள்ளது. 2019 ஆம் ஆண்டு, புலியை தேர்வு செய்ய வாக்களிக்கவும்” என்று அவர் பேசினார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் நிலையில், அனந்தகுமார் ஹெக்டே, மேற்கண்டவாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்த ஆனந்த் குமார் ஹெக்டே, “70 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சி செய்திருந்தால், பிளாஸ்டிக் சேர்களுக்கு பதிலாக சில்வர் இருக்கையில் அமர்ந்து இருப்பீர்கள்” என்றார்.

ஆனந்த் குமார் ஹெக்டே, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பது இது முதன்முறையல்ல. 2018 ஆம் ஆண்டு துவக்கத்தில், தலித்களை நாய்களோடு ஒப்பிட்டு பேசி கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியிருந்தார். இதேபோல் கன்னட மொழி பேசுபவர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  #AnantKumarHegde #HegdeControversy
Tags:    

Similar News