செய்திகள்

டெல்லி - மும்மத தலங்களுக்கு சென்று வழிபட்ட அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே

Published On 2018-06-28 15:15 IST   |   Update On 2018-06-28 15:15:00 IST
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இன்று டெல்லியில் அமைந்துள்ள மும்மத தலங்களின் முக்கிய இடங்களுக்கு சென்று வழிபட்டதுடன் அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார். #NikkiHaley
புதுடெல்லி:

ஐ.நா.விற்கான அமெரிக்க தூதரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல் நாளான நேற்று நிக்கி இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டருடன் இணைந்து வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றி பார்த்தார். குறிப்பாக முகலாய ஆட்சியை சேர்ந்த பேரரசர் உமாயூனின் சமாதிக்கு சென்றார்.



இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று டெல்லியில் உள்ள கவுரிசங்கர் கோவில், ஜம்மா மசூதி, குருத்வாரா கஞ்ச் சாகிப் மற்றும் மத்திய பாப்டிஸ்ட் சர்ச் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். 

குருத்வாரா சென்ற ஹாலே அங்கு ரொட்டிகள் செய்து பணிவிடை செய்தார். மேலும், ஜம்மா மசூதிக்கு சென்ற அவர் மசூதியில் வெளியில் இருந்த சிறுவர்களுடன் கலந்துரையாடினார்.

சீக்கியரான இவரது தந்தை அமெரிக்காவில் சென்று குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  #NikkiHaley
Tags:    

Similar News