செய்திகள்
பிரதமர் மோடியுடன் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் சந்திப்பு
மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #NikkiHaley #Modi
புதுடெல்லி:
ஐ.நா.விற்கான அமெரிக்க தூதரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹலே மூன்றுநாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல் நாளான இன்று இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டருடன் இணைந்து டெல்லியில் உள்ள முகலாய பேரரசர் உமாயூனின் சமாதி மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை நிக்கி ஹாலே சுற்றிப் பார்த்தார்.
இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அவர் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். #NikkiHaley #Modi