செய்திகள்

பாலிவுட்டில் கதாநாயகனாக களமிறங்கிய முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி

Published On 2018-06-27 14:15 GMT   |   Update On 2018-06-27 14:15 GMT
சினிமாவில் இருந்து அரசியலில் குதிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.
பாட்னா:

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ்பிரதாப் யாதவ் என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் கட்சியுடன் கூட்டணி அமைத்து லாலு பிரசாத் யாதவ் கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது, தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும், தேஜ்பிரதாப் யாதவ் சுகாதாரத்துறை மந்திரியாகவும் பதவியேற்றனர்.

பின்னர், ஆட்சியை கவிழ்த்து விட்டு நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தார். பின்னர், தேஜஸ்வி யாதவ் முழு அரசியலில் இறங்கினார். தந்தை சிறை வாசத்தில் இருக்கும் நிலையில், தேஜஸ்வி கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்து, சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களிலும் வென்று காட்டினார்.

ஆனால்,  தேஜ்பிரதாப் யாதவ் அரசியலில் கவனம் செலுத்தவில்லை. சமீபத்தில் திருமணம் முடித்த அவர் தனது பார்வையை கலைத்துறை பக்கம் தற்போது திருப்பியுள்ளார். ஏற்கனவே, ஒரு போஜ்பூரி படத்தில் அவர் நடித்து இருந்தாலும், தற்போது பாலிவுட்டில் கால்தடம் பதித்துள்ளார்.

‘ருத்ரா - தி அவதார்’ என்ற படப்பெயருடன் பர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ளார். 
Tags:    

Similar News