செய்திகள்

போலீசிடம் சரணடைந்த நக்சல் இயக்கத்தை சேர்ந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சம் பரிசு

Published On 2018-06-26 10:11 GMT   |   Update On 2018-06-26 10:11 GMT
தாமாக முன்வந்து சரணடைந்த நக்சலைட் இயகத்தை சேர்ந்த பெண்ணுக்கு, போலீசார் தரப்பில் 3 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. #Naxal
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம், கோண்டகோன் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில், நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த பிசாந்தி நீதம் என்ற பெண் அம்மாவட்டத்தின் கூடுதல் எஸ்.பி மகேஷ்வர் நாக் முன்னிலையில் இன்று சரணடைந்தார்.

நக்சல் இயக்கத்தில் கொரில்லா படைப்பிரிவில்  இருந்த பிசாந்தி நீதமின் தலைக்கு போலீசார் 3 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தனர். ஆனால், பிசாந்தி போலீசாரிடம் சரணடைந்ததால் அவரது தலைக்கு அறிவிக்கப்பட்டிருந்த பரிசு தொகையான ரூபாய் 3 லட்சத்திற்கான காசோலையை போலீசார் அவரிடம் அளித்தனர்.  

சரண்டர் ஆகும் நபர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தரும் மாநில அரசின் திட்டத்தால் கவரப்பட்டு, போலீசாரிடம் சரணடைந்ததாக பிசாந்தி தெரிவித்தார். அவருக்கு திருந்தி வாழ தேவையான அரசின் மறுவாழ்வு நலத்திட்டங்கள் அனைத்தும் ஏற்படுத்தி தரப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #Naxal
Tags:    

Similar News