செய்திகள்

எந்த பிரச்சனையையும் வன்முறையால் தீர்க்க முடியாது - பிரதமர் மோடி பேச்சு

Published On 2018-06-24 15:37 IST   |   Update On 2018-06-24 15:37:00 IST
வன்முறையால் எந்த பிரச்சனையையும் தீர்த்துவிட முடியாது, அமைதியும் அகிம்சையும்தான் இறுதியில் வெற்றிபெறும் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். #PMModi #MannKiBaat
புதுடெல்லி:

2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ என்னும் நிகழ்ச்சியின் மூலம் வானொலி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், இன்று 45-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றிய மோடி, வன்முறையால் எந்த பிரச்சனையையும் தீர்த்துவிட முடியாது, அமைதியும் அகிம்சையும்தான் இறுதியில் வெற்றிபெறும் என தெரிவித்துள்ளார்.

குருநானக் தாஸ், கபிர் தாஸ் போன்ற மகான்கள் சாதிமுறைகளை ஒழிக்க போராடியதுடன் நாட்டில் சமூக ஒருமைப்பாடு நிலவ பாடுபட்டதாக தெரிவித்த மோடி, மறைந்த பாரதிய ஜன சங்க தலைவர் சியாமா பிரசாத் மூகர்ஜியும் அதே வழியில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்காக உழைத்ததாகவும் குறிப்பிட்டார்.

ஜாலியன்வாலா பாக் படுகொலையை நினைவுகூர்ந்த அவர், இந்த சம்பவத்தின் மூலம் கொடூரமும் வன்முறையும் எந்த பிரச்சனையையும் தீர்க்க உதவாது. அகிம்சை, விட்டுக் கொடுக்கும் குணம், தியாகம் போன்றவைதான் இறுதியில் வெற்றிபெறும் எனவும் வலியுறுத்தினார். #PMModi  #MannKiBaat
Tags:    

Similar News