செய்திகள்

குஜராத்தில் கொடூரம்- பள்ளி கழிவறையில் 9-ம் மாணவன் படுகொலை

Published On 2018-06-22 17:06 IST   |   Update On 2018-06-22 17:06:00 IST
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஒரு பள்ளியின் கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #StudentMurdered #GujaratStudentKilled
வதோதரா:

குஜராத் மாநிலம் வதோதரா நகரின் பரன்போரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் இன்று மாலை மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவனது தலை மற்றும் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. அருகில் ஒரு கத்தியும் கிடந்தது. எனவே, மாணவனை யாரோ கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என தெரிகிறது. 

இதுபற்றி  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பள்ளிக்கு வந்து மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த மாணவனுக்கும் 10ம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. எனவே, அந்த மாணவன் ஆத்திரத்தில் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த மாணவன் தலைமறைவாகிவிட்டதால், அவனைத் தேடி வருகின்றனர்.

மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் கொலையாளியை அடையாளம் காணும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மாணவன் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும், பள்ளி முன்பு ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  #StudentMurdered #GujaratStudentKilled
Tags:    

Similar News