செய்திகள்

92 வயதில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் 84 வது டாக்டர் பட்டம் பெற்று அசத்தல்

Published On 2018-06-21 15:52 IST   |   Update On 2018-06-21 15:52:00 IST
பசுமைப்புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தனது 92 வயதில் 84 வது கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார். #MSSwaminathan
சென்னை:

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் எம்.எஸ். சுவாமிநாதன். வேளாண் துறையில் மிகப்பெரிய விஞ்ஞானியான இவர் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.

84 வது கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். 92 வயதான இவர் ஐ.டி.எம். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் விருது வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சுவாமி நாதனுக்கு பட்டத்தை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் பேசிய சுவாமி நாதன், இந்தியாவில் பட்டியினை போக்கும் ஒரே வழி நிலையான வேளாண்மையை ஏற்படுத்துவதாகும். மேலும், வேளாண் துறையில் பயின்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர்.

கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் 90 வயதிலும் தனது ஆராய்ச்சி அறக்கட்டளைப் பணிகளை சுறுசுறுப்புடன் மேற்கொண்டு வருகிறார். #MSSwaminathan
Tags:    

Similar News