செய்திகள்

காவிரி ஆணையம் விவகாரம் - கர்நாடகா மீண்டும் முட்டுக்கட்டை

Published On 2018-06-18 08:53 GMT   |   Update On 2018-06-18 08:53 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகளில் முட்டுக்கட்டை போடும் விதமாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார். #Kumaraswamy #Karnataka #CauveryIssue
புதுடெல்லி:

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை உறுதி செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் உறுப்பினர்களாக இடம் பெறுபவர்களின் விவரங்களை தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களும் அறிவித்து விட்டன. ஆனால் கர்நாடகா இன்னமும் உறுப்பினர் பெயரை அறிவிக்கவில்லை.

ஜூன் 12-ந்தேதிக்குள் உறுப்பினர் பெயரை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அதை கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கண்டு கொள்ளவில்லை.



இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள குமாரசாமி இன்று பிற்பகல் பிரதமர் மோடியை சந்தித்து காவிரி ஆணையம் பற்றி பேச திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று மதியம் அவர் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் முறைப்படி ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் அப்படி ஒப்புதல் பெறாமல் காவிரி ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமாகும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

குமாரசாமியின் இந்த கருத்தால் காவிரி ஆணைய விவகாரத்தில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. #Kumaraswamy #Karnataka #CauveryIssue

Tags:    

Similar News