செய்திகள்

சண்டிகரில் ஒன்றரை வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து கொன்ற பரிதாபம்

Published On 2018-06-18 11:56 IST   |   Update On 2018-06-18 11:56:00 IST
சண்டிகரில் ஒன்றரை வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர்:

சண்டிகரில் உள்ள பல்சோரா பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று மாலை சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இடத்திற்கு வந்த தெரு நாய்கள் சிறுவர்களை தாக்க தொடங்கின. நாயை கண்ட சிறுவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். ஆனால் ஒரு சிறுவன் மட்டும் நாய்களிடம் சிக்கி கொண்டான்.

படுகாயமடைந்த ஒன்றரை வயது சிறுவனான ஆயுஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். நாய் கடித்ததில் சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. இது போன்ற பல வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. தெரு நாய்களால் பல சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்களில் தொல்லை அதிகமாக இருப்பதால் சிறுவர்களை வெளியே விட பெற்றோர்கள் பயப்படுகின்றனர். எனவே தெரு நாய்களை பிடிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News