செய்திகள்

காற்றை மட்டும் சுவாசித்து 70 ஆண்டுகளுக்கு மேலாக உயிர்வாழும் அதிசய மனிதர்

Published On 2018-06-14 11:38 IST   |   Update On 2018-06-14 11:38:00 IST
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் 70 ஆண்டுகளுக்கு மேலாக உணவு, தண்ணீர் இல்லாமல் காற்றை மட்டும் சுவாசித்து உயிர்வாழும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. #PrahladJani
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் மேக்சனா மாவட்டத்தில் உள்ள சரோட் கிராமத்தில் மாதாஜி என அனைவராலும் அழைக்கப்படுபவர் பிரக்லாத் ஜனி. 88 வயதான இவர் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். விஞ்ஞானிகள் இவரை பிரீத்தெரியன் என அழைக்கின்றனர்.

ஜனி வித்தியாசமான சக்திகளை கொண்டவர். இவர் 70 ஆண்டுகளுக்கு மேலாக உணவும் மற்றும் நீர் இல்லாமல் உயிர் வாழ்ந்து வருகிறார். காற்றை மட்டும் சுவாதித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். அவரிடம் பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் அவர் எவ்வாறு உயிர் வாழ்கிறார் என்பது குறித்து யாராலும் கண்டறிய முடியவில்லை. அவரின் உடல் பாகங்களின் செயல்பாடுகள் சரியாக உள்ளன. அவர் சிறுநீரகம் கூட கழிக்காமல் உயிர் வாழ்கிறார். கடவுளின் அருளால் உணவு இல்லாமல் உயிர்வாழ்வதாக அவர் கூறினார்.

அதிசய யோகியான இவரை சந்திக்க பல தலைவர்கள் வந்து செல்கின்றனர். இவர் பக்தர்களிடம் காணிக்கை ஏதும் வாங்காமல் இலவசமாக தரிசனம் அளிக்கிறார். உணவு இல்லாமல் 70 ஆண்டுகளுக்கு மேலாக உயிர்வாழும் இவர் இன்னும் அறிவியலுக்கு எட்டாத தூரத்தில் உள்ளார். #PrahladJani
Tags:    

Similar News