செய்திகள்

சத்தீஸ்கரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 19 நக்சலைட்கள் கைது

Published On 2018-06-14 02:24 IST   |   Update On 2018-06-14 02:24:00 IST
சத்திஸ்கர் மாநிலத்தில் ரிசர்வ் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 19 நக்சலைட்கள் கைது செய்யப்பட்டனர். #Chhattisgarhnaxalitesheld

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் ஒன்றாக இணைந்து நாராயண்பூர் மாவட்டத்தில் தீவிர தேடுதல் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் வேட்டையின்போது முஸ்நார், டொயாமெடா, புகர்பால், இர்பானார் பகுதிகளில் பதுங்கி இருந்த 16 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீசாரை தாக்கியது உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல பிஜாபூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடிதல் வேட்டையின் போது 3 நக்சலைட்கள் பிடிபட்டனர். இதில் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இரண்டு பேர் தலைக்கு போலீசார் தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarhnaxalitesheld
Tags:    

Similar News