செய்திகள்

போர் நிறுத்தத்தின் புனிதத்தை மதிக்காத பாகிஸ்தான்

Published On 2018-06-13 09:42 GMT   |   Update On 2018-06-13 09:42 GMT
போர் நிறுத்தத்தின் புனிதத்தை பாகிஸ்தான் எப்போதுமே மதித்ததில்லை என எல்லை பாதுகாப்பு படை உதவி இயக்குனர் ஜெனரல் கமல்நாத் சவுபே தெரிவித்துள்ளார். #BSF #ADG #KamalNathChoubey #PakistanCeasefire
ஜம்மு: 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

இதற்கிடையே, ஜம்முவின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.   இதில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும், 3 வீரர்கள் காயம் அடைந்தனர். 



இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படை உதவி இயக்குனர் ஜெனரல்  கமல்நாத் சவுபே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

போர் நிறுத்தம் என்பது இருநாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தம். நாம் அந்த ஒப்பந்தத்தை மதித்து நடந்து வருகிறோம். ஆனால், பாகிஸ்தான் போர் நிறுத்தத்தின் புனிதத்தை எப்போதுமே மதிப்பதில்லை என தெரிவித்துள்ளார். #BSF #ADG #KamalNathChoubey #PakistanCeasefire
Tags:    

Similar News