செய்திகள்

வங்கி மோசடியில் தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய பிடிவாரண்ட்

Published On 2018-06-12 13:44 GMT   |   Update On 2018-06-12 13:44 GMT
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று ஜாமினில் விட முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. #NiravModi
மும்பை:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதில், சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.

நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில், பிரிட்டன் நாட்டில் குடியேற நிரவ் கோடி முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று ஜாமினில் விட முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. #warrantagainstNiravModi #NiravModi
Tags:    

Similar News