செய்திகள்

ஒய்.எஸ்.ஆர் காங். தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை தேனீக்கள் கொட்டியதால் லேசான காயம்

Published On 2018-06-07 16:53 IST   |   Update On 2018-06-07 16:53:00 IST
ஆந்திராவின் நிடாடவூலு பகுதியில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தேனீக்கள் கொட்டியதில் லேசான காயமடைந்தார்.
அமராவதி:

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூர பாதயாத்திரையை தொடங்கினார். இந்நிலையில், பாதயாத்திரையின் ஒரு பகுதியாக நிடாடவூலு தொகுதிக்கு உள்பட்டுள்ள கனுரு கிராமத்தில் நடந்த கூட்டத்தில் பொதுமக்களிடையே பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்குள்ள மரத்தில் இருந்த தேனீக்கள் கூட்டத்தை யாரோ கலைத்து விட, தேனிக்கள் கலைந்து அங்குள்ளவர்களை கொட்ட ஆரம்பித்தது. இதில், ஜெகன் மோகனும் தப்பவில்லை. அவரை தொண்டர்கள் துணிகளை கொண்டு மறைக்க பின்னர் அங்கிருந்து அவரை அப்புறப்படுத்திச் சென்றனர்.

தேனீக்கள் கொட்டியதில் ஜெகன் மோகன் ரெட்டி லேசான காயமும், பலர் பலத்த காயமும் அடைந்தனர். இதனை அடுத்து, அவர் மருத்துமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துவிட்டு தனது வீட்டுக்கு திரும்பினார்.
Tags:    

Similar News