செய்திகள்

சோகத்தில் முடிந்த விடுமுறை - மும்பையில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

Published On 2018-06-03 23:25 IST   |   Update On 2018-06-04 11:00:00 IST
மும்பையின் ரத்னகிரி கடல் பகுதியில் விடுமுறையை கொண்டாட சென்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை:

மும்பையின் போரிவாலி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விடுமுறை தினத்தை கழிக்க ரத்னகிரி பகுதியில் உள்ள கண்பதிபுலேவுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் வழியில் ஏரே வாரே கடற்கரையில் குளிக்க திட்டமிட்டு நின்றுள்ளனர்.

அவர் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதிக அளவில் வந்த அலையில் சிக்கினர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் போராடி ஒருவரை பத்திரமாக மீட்டனர். மற்றவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

அப்போது, காணாமல் போன ஆறு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விடுமுறையை கொண்டாட சென்ற இடத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News