செய்திகள்

எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாது - அரியானா முதல்வருக்கு ஜாட் சமூகத்தினர் எச்சரிக்கை

Published On 2018-06-03 12:46 IST   |   Update On 2018-06-03 12:46:00 IST
அரியானாவில் ஜாட் சமூகத்தினருக்கு அளித்த வாக்குறுதிகளை ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால், முதல்வர் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியையும் நடத்த விட மாட்டோம் என ஜாட் சமூகத்தினர் எச்சரித்துள்ளனர். #haryana #jatscommunity
கொல்கத்தா:

அரியானா மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் ஆட்சி செய்து வருகிறார். இவரது ஆட்சியில் கடந்த 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு வேண்டி ஜாட் சமூகத்தினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது, இடஒதுக்கீடு பிரச்சனை தொடர்பாக குழு அமைத்து முடிவெடுக்கப்படும் என மாநில அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று அகில இந்திய ஜாட் ஆரக்‌ஷான் சங்கர்ஷ் சமிதியின் பேரணி நடத்தப்பட்டது. அதில் பேசிய சமிதியின் தலைவர் யஷ்பால் மாலிக், மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்டு ஜட்ஸ் சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்தார். மேலும், மத்திய அரசும், வரும் பாராளுமன்ற தேர்தலில் ஓபிசி பிரிவில் போட்டியிடுவதை எளிமையாக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பாஜக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், 2016-ல் அமைதியாக நடத்தப்பட்ட போராட்டத்தை வன்முறையாக மாற்றியது பாஜகவினரே எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லையெனில், அரியானா மாநிலத்தில் ஒரு பகுதியிலும் கூட முதல்மந்திரி உட்பட எந்த பாஜக தலைவர்களால் எவ்வித நிகழ்ச்சிக்கும் செல்ல முடியாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #haryana #jatscommunity
Tags:    

Similar News