செய்திகள்

4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வங்கி கணக்குகளை முடக்க ரிசர்வ் வங்கி முடிவு

Published On 2018-05-29 22:23 GMT   |   Update On 2018-05-29 22:23 GMT
ஜன்தன் உள்ளிட்ட அடிப்படை வங்கி கணக்குகளில் இருந்து 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அந்த வங்கி கணக்கு முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. #RBI #JanDhanaccounts

புதுடெல்லி:
 
எஸ்.பி.ஐ. வங்கி கணக்கின் குறைந்தபட்ச இருப்பு தொகை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் பலரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதைத்தொடர்ந்து அடிப்படை கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வங்கி கணக்குகளுக்கு குறைந்தபட்ச தொகை தேவையில்லை என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. 

இந்நிலையில் தற்போது இந்த அடிப்படை வங்கி கணக்குகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
 
ஜன்தன் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வங்கி கணக்குகளில் இருந்து 4 முறைக்கு மேல் எந்த வடிவில் பணம் எடுத்தாலும் அந்த கணக்கு அம்மாதம் முடியும் வரை முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சில வங்கிகள், அந்த கணக்குகளை சாதாரண வங்கி கணக்காக மாற்றி, அதற்கான அபராத தொகையையும் வசூலிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #RBI #JanDhanaccounts
Tags:    

Similar News