செய்திகள்

உள்துறை மந்திரியின் மகனுக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் - போலீசார் விசாரணை

Published On 2018-05-26 23:57 IST   |   Update On 2018-05-26 23:57:00 IST
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் மகனும், உ.பி. எம்.எல்.ஏ.வுமான பங்கஜ் சிங்க்க்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #RajnathSingh #PankajSingh
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாஜக எம் பிக்கள் சிலரின் வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் வந்தது. அதில், மூன்று நாள்களில் 10 லட்சம் ரூபாய் தரவேண்டும். இல்லையேல் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என பதிவிட்டிருந்தது.

மீரான்புர் கத்ரா தொகுதி  வீர் விக்ரம் சிங், தத்ரால் தொகுதி மன்வேந்திர சிங், தாராபாங்கி தொகுதி பிரேம் பிரகாஷ் பாண்டே உள்பட 12 எம்.எல்.ஏ.க்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் கொலை மிரட்டல் விடுத்த நபர்களை பிடிக்க சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.



இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் மகனும், உ.பி. எம்.எல்.ஏ.வுமான பங்கஜ் சிங்குக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பிரபல தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். கொலை மிரட்டல் விடுத்த எண் டெக்சாசில் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் மகனும், உ.பி. எம்.எல்.ஏ.வுமான பங்கஜ் சிங்குக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #RajnathSingh #PankajSingh
Tags:    

Similar News