செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்

Published On 2018-05-22 10:06 GMT   |   Update On 2018-05-22 10:49 GMT
ஆந்திர மாநிலத்தில் ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்தி தெலுங்கு தேசம் தொண்டர் ஒருவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பை காட்டியுள்ளார். #FuelPriceHike #TeleguDesamParty
ஐதராபாத் :

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்ததை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடுகிடு உயர்வை சந்தித்து வருகிறது. இதனால் இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். விலை உயர்வுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக்கள் மற்றும் கண்டன குரல்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நந்திகமா கிராமத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த தொண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்தினார். #FuelPriceHike #TeleguDesamParty
Tags:    

Similar News