செய்திகள்

தொடரும் ஐ.பி.எல். சூதாட்டம் - உத்தரப்பிரதேசத்தில் 10 பேர் கைது

Published On 2018-05-22 11:21 IST   |   Update On 2018-05-22 11:21:00 IST
உத்தரப்பிரதேச மாநிலம் நந்தகிராம் பகுதியில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #IPLgambling
லக்னோ:

இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை மையமாக வைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சூதாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் நந்தகிராம் பகுதியில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலில் அடிப்படையில் அப்பகுதி கவுன்சிலரின் கணவரின் அலுவலகத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கியும், ஒரு மடிக்கணினியும், லட்சக்கணக்கான ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். #IPLgambling
Tags:    

Similar News