செய்திகள்

பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை பரிசோதனை மீண்டும் வெற்றி

Published On 2018-05-21 14:04 IST   |   Update On 2018-05-21 14:04:00 IST
200 கிலோ வெடிப் பொருளுடன் பாய்ந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.#BrahMostestfire
புதுடெல்லி:

இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான  ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். 200 கிலோ வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும்போது, தேவைப்பட்டால் இலக்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கின் போக்குக்கு ஏற்ப திசைமாறி விலகிச் சென்றும் தாக்கும்.

கடந்த 2001-ம் ஆண்டு முதன்முதலாக பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை தொடர்ந்து 2003-ம் ஆண்டு கடலில் இருந்தபடி விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், ஒடிசா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் உள்ள சாந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை இன்று மீண்டும் பரிசோதிக்கப்பட்டது.

இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.#BrahMostestfire
Tags:    

Similar News