செய்திகள்

திரிபுரா நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி - முதல்வர் பிப்லப் குமார் தேப் நேரில் ஆய்வு

Published On 2018-05-18 10:15 GMT   |   Update On 2018-05-18 10:15 GMT
திரிபுரா மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து முதல்வர் பிப்லப் குமார் தேப் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தார். #BiplabKumarDeb
அகர்தலா:

வடமாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. திரிபுரா மாநிலத்தில் பெய்த கனமழையால் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள மோகன்புரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



இந்நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் பிப்லப் குமார் தேப் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும், சீரமைப்பு பணிகளை விரைவில் நடத்தி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வெள்ளம் புகுந்த தெருக்களில் உள்ள நீரில் இறங்கி அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முதல்வராக பதவியேற்றதில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறி சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான பிப்லப் குமார் தேப் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #BiplabKumarDeb

Tags:    

Similar News