செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Published On 2018-05-18 06:12 GMT   |   Update On 2018-05-18 07:28 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. #jammukashmir #PakistanArmyViolates
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள ஆர்எஸ் பூரா - அரினா பகுதியில் இன்று அதிகாலை பாகிஸ்தான் படைகள் அத்துமீறி பயங்கர தாக்குதல் நடத்தினர். மோர்டார்ஸ் மற்றும் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து நடைபெற்ற இந்த தாக்குதல் சிறிது நேரத்திற்கு பின் முடிவடைந்தது.

இருப்பினும் இந்த தாக்குதலில் இந்திய வீரர் சீதாராம் உபதாய் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பலர் காயமடைந்தார். அதில் இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அரினா பகுதியில் இரண்டு பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.



ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஜம்மு-காஷ்மீரில் எவ்வித தாக்குதலும் நடத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், இன்று அதிகாலை நடைபெற்ற தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #jammukashmir #PakistanArmyViolates

Tags:    

Similar News