செய்திகள்

கேரளாவில் புதிய தொழிலாளர் கொள்கை- இனி குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.600

Published On 2018-05-18 04:30 GMT   |   Update On 2018-05-18 04:30 GMT
கேரளா மாநிலத்தில் தனிநபரின் குறைந்தபட்ச ஒருநாள் ஊதியத்தை ரூ.600-ஆக உயர்த்தும் வகையிலான புதிய தொழிலாளர் கொள்கைக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. #keralalabours #employeefriendly #labourpolicy
திருவனந்தபுரம்:

சமீபத்தில் கேரள அரசு தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், தொழிலாளர் நலத்திட்டங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. அதற்கு கேரள மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. அந்த புதிய திட்டத்தில் மிக முக்கிய அம்சமாக, தனிநபரின் ஒருநாள் குறைந்தபட்ச வருவாயை ரூ.600 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், கூலித்தொழிலாளிகள் உள்பட அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர் வங்கிகளை விரிவடையச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு பணி உத்திரவாதம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம் பெயர்ந்து கேரளாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் மற்றும் விடுதி சேவைகளும் இந்த புதிய கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் இரண்டரை லட்சம் பேர் காப்பீட்டுத் திட்டத்துக்காக விண்ணப்பித்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை மந்திரி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #keralalabours #employeefriendly #labourpolicy
Tags:    

Similar News