செய்திகள்

மேற்குவங்காளத்தில் உள்ளாட்சி தேர்தலில் வன்முறை: 16 பேர் பலி

Published On 2018-05-14 22:13 GMT   |   Update On 2018-05-14 22:13 GMT
மேற்குவங்காளத்தில் உள்ளாட்சி தேர்தலில் மாநிலம் முழுவதும் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஒரே நாளில் 16 பேர் உயிர் இழந்தனர். #Panchayatpolls #violence
கொல்கத்தா:

மேற்குவங்காள மாநிலத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளிடையே 4 முனை போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

இதற்கிடையில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரிடையே மோதல் வெடித்தது. அதே போல் பா.ஜ.க. தொண்டர்களும் வன்முறையில் ஈடுபட்டனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் ஓட்டுபோட வந்த மக்களை கலவரக்காரர்கள் விரட்டி அடித்தனர். செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.

மாநிலம் முழுவதும் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஒரே நாளில் 16 பேர் உயிர் இழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். மேற்குவங்காளத்தில் தேர்தலின் போது நடந்த வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டி அங்கு சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டதாகவும் எனவே உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ கோரிக்கை விடுத்து உள்ளார்.   #Panchayatpolls #violence
Tags:    

Similar News