செய்திகள்
உ.பி.யில் 26 மாவட்டங்களை புழுதி புயல் நாளை தாக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களை மணிக்கு 70 கிமீ வேகத்தில் நாளை புழுதி புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #UPDustStorm
லக்னோ:
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் புழுதி புயல் வீசி வருகிறது. இந்த புழுதி புயலினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதோடு, பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களை மணிக்கு 70 கிமீ வேகத்தில் நாளை புழுதி புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷ்ரவஸ்தி, பல்ராம்பூர், வாரனாசி, கோரக்பூர், பைசாபாத், அம்பேத்கர் நகர், அலகாபாத், மிர்சாபூர் உள்ளிட்ட மாவட்டங்களை புழுதி புயல் தாக்கும் என கூறப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்தன் வாரம் வீசிய புழுதி புயல் காரணமாக 134 பேர் உயிரிழந்ததோடு, 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மே 9-ம் தேதி வீசிய புயலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #UPDustStorm