செய்திகள்
பாலகங்காதர திலகர் குறித்த சர்ச்சை கருத்து - பா.ஜனதா மன்னிப்பு கோர அசோக் சவான் வலியுறுத்தல்
ராஜஸ்தானில் தனியார் பள்ளி பாடப்புத்தகம் ஒன்றில் பாலகங்காதர திலகர் குறித்து சர்ச்சை கருத்து வெளியானதால் பாரதிய ஜனதா கட்சி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி அசோக் சவான் கூறியுள்ளார்.
மும்பை:
ராஜஸ்தான் இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்று தனது பாடப்புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரை பயங்கரவாதத்தின் தந்தை என குறிப்பிட்டு இருந்தது. பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி பாடப்புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் கூறியதாவது:-
சுதந்திர போராட்டத்துக்கான தீயை பற்ற வைத்தவர்களுள் ஒருவரான திலகரை பயங்கரவாதத்தின் தந்தை என பாடப்புத்தகங்களில் குறிப்பிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட கோடிக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பா.ஜனதா கட்சி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.