செய்திகள்

தெலுங்கானாவில் பத்திரப்பதிவு முறையில் புதிய நடைமுறை- முதல்-மந்திரி சந்திரசேகரராவ் அறிவிப்பு

Published On 2018-05-12 04:03 GMT   |   Update On 2018-05-12 04:03 GMT
தெலுங்கானாவில் பத்திரப்பதிவுக்கான புதிய நடைமுறை குறித்த அறிவிப்பு ஒன்றை முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வெளியிட்டார்.#TELANGANACM #ChandraSekharRao
ஐதராபாத்:

தெலுங்கானாவில் விவசாய மக்களுக்காக ரைத்து பந்து என்ற முதலீட்டு உதவி திட்டத்தை கரீம்நகரில் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பத்திரப்பதிவுக்கான புதிய நடைமுறை குறித்த அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த புதிய திட்டத்தின்படி விவசாயிகள் தங்களிடம் உள்ள பட்டா, பாஸ்புத்தகம் மூலம் எளிதாக வங்கி கடன்களை பெற இயலும். மாநிலம் முழுவதும் உள்ள 2.38 கோடி ஏக்கர் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டதில், 1.4 கோடி ஏக்கர் விவசாய நிலமாக அறியப்பட்டு அவை முறையாக டிஜிட்டல் முறையில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய முறை ஜூன் 2-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருவதோடு, மண்டல் ரெவின்யூ அலுவலர்கள் சார் பதிவாளர்களாக செயல்பட இருக்கிறார்கள். தெலுங்கானா மாநிலம் உருவான நாளில் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். இந்த திட்டத்தின்படி இணையதளம் மூலம் பத்திரப்பதிவுக்கான தேதியை பதிவு செய்து விட்டு, அந்த நாளில் பத்திரபதிவை மிக எளிதாக செய்து முடிக்க முடியும். இது குறித்த தகவல் 4 அல்லது 5 நாட்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தெலுங்கானா அரசால் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீரமைப்புகள் அடிப்படையில் பத்திரப்பதிவு முறைகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பத்திரப்பதிவு சமயத்தில் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இந்த முறை பெரும் உதவியாக இருக்கும் என்று தெலுங்கான அரசு தெரிவித்துள்ளது. #TELANGANACM #ChandraSekharRao
Tags:    

Similar News