செய்திகள்

காஷ்மீரை சேர்ந்த பெண்கள் உள்பட 5 பேர் மீது டெல்லியில் கொடூர தாக்குதல்

Published On 2018-05-11 18:17 IST   |   Update On 2018-05-11 18:17:00 IST
புதுடெல்லியில் காஷ்மீரை சேர்ந்த 5 பேரை பலர் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #kashmirpeopleattacked
புதுடெல்லி:

புதுடெல்லியின் சன்லைட் காலணி என்ற பகுதியில் வசிக்கும் காஷ்மீரை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 5 பேரை நேற்றிரவு அப்பகுதியிலிருந்த மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் பேசுகையில், ‘நாங்கள் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பதாலேயே எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், எங்களை தாக்கியவர்கள் எனது உறவினர்களையும் தாக்கியதுடன் எனது சகோதரியையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.

அவர்கள் தாக்கும்போது 'காஷ்மீர் பயங்கரவாதிகளே வெளியேறுங்கள்' என்று கூறியபடி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் அச்சத்துடனேயே வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். #kashmirpeopleattacked
Tags:    

Similar News