செய்திகள்

ஜனகபுரி சீதை கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு - நெடுநாள் ஆசை நிறைவேறியதாக நெகிழ்ச்சி

Published On 2018-05-11 09:03 GMT   |   Update On 2018-05-11 09:03 GMT
ஜனக மன்னரின் மகளும் ராமரின் மனைவியுமான சீதை பிறந்த ஜனகபுரியில் உள்ள ஆலயத்தில் இன்று வழிபாடு செய்ததன் மூலம் நெடுநாள் ஆசை நிறைவேறியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Modiofferprayers #JanakpurSitatemple
காத்மாண்டு:

மிதிலை மன்னனான ஜனகர், குழந்தை சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார். இதனால் சீதை பூமாதேவியின் அவதாரமாக கருதப்படுகிறார்.

ஜனகபுரி (இன்றைய பீகார் என்கிறார்கள்) மன்னன் ஜனகராஜா. இவர் மகள் சீதை. இதிகாசப்படி இவருடைய பிறப்பு மிதிலை நகரில் இருந்துள்ளது. அந்த மிதிலை நகர்தான் பீகாரின் சீதாபுரி மாவட்டமாக இன்றும் சீதை நினைவாக போற்றப்படுகிறது.

அதேவேளையில், நேபாளம் நாட்டில் உள்ளவர்கள் அங்குள்ள ஜனகபுரியில் சீதை பிறந்ததாகவும், இங்குதான் சுயம்வரத்தின்போது ராமர் - சீதைக்கு திருமணம் நடந்ததாகவும் நம்புகின்றனர்.

இந்நிலையில், நேபாள நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி ஜனகபுரி நகரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகருக்கு நேரடி பஸ் சேவையை இன்று தொடங்கி வைத்தார்.



அங்குள்ள சீதை ஆலயத்தில் இன்று வழிபாடு செய்த மோடி, இந்த பயணத்தின்போது இங்கு வழிபாடு செய்ததன் மூலம் தனது நெடுநாள் ஆசை நிறைவேறியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Modiofferprayers #JanakpurSitatemple

Tags:    

Similar News