செய்திகள்

கோதாவரி ஆற்றில் படகு தீப்பிடித்தது- 80 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

Published On 2018-05-11 13:06 IST   |   Update On 2018-05-11 13:06:00 IST
ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த 80 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். #BoatFire #PapiHills
ஐதராபாத்:

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பாபிகொண்டலு மலைப்பகுதியின் அழகை கண்டுகளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் இன்று படகில் சென்றுகொண்டிருந்தனர். ராயல் கோதாவரி சுற்றுலா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த படகில் 120 பேர் வரை சென்றதாக தெரிகிறது.

வீரவரப்பு ரங்கா கிராமத்தின் அருகே கோதாவரி ஆற்றின் நடுப்பகுதியில் படகு சென்றுகொண்டிருந்தபோது, திடீரென படகின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியதால் கடும் புகை எழுந்தது. பயணிகள் பீதியடைந்து படகின் ஒரு பகுதிக்கு ஓடினர். இதனால் படகு நிலை குலைந்தது. எனினும் படகோட்டி சாமர்த்தியமாக செயல்பட்டு கரைக்கு படகை திருப்பினார்.


கரையை நெருங்கியபோது ஏராளமான பயணிகள் கீழே குதித்து உயிர் தப்பினர். ஒருசிலரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.  இதனால் படகில் சென்ற அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், இந்த விபத்துகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.  #BoatFire #PapiHills
Tags:    

Similar News