செய்திகள்

உ.பி. - புயல் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு

Published On 2018-05-10 21:18 GMT   |   Update On 2018-05-10 21:18 GMT
உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடியுடன் பெய்து வரும் புயல் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UP #Thunderstorm
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் பல மாவட்டங்களில் முன் எச்சரிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

உ.பி.யின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆக்ரா, பிரோசாபாத், அலிகார், மதுரா மற்றும் இடாவா நகரங்களில் பெய்த பலத்த மழைக்கு 9 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடியுடன் பெய்து வரும் பலத்த மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் இடாவா நகரில் 5 பேர், மதுரா, அலிகார், ஆக்ராவில் தலா 3 பேர், பிரோசாபாத்தில் 2 பேர், ஹத்ராஸ் மற்றும் கான்பூரில் தலா ஒருவர் என மொத்தம் 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும், இந்த மழைக்கு சிக்கி 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவித்தனர்.

மதுராவில் புயல் மழையில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை இன்று சந்தித்த துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா, புயலில் சிக்கி பலியானவர்க்ள் குடும்பத்தினருக்கு க் ல்யானபள் தலா 4 லட்சம் ரூபாய் வ்ழங்கப்ப்டும் என அறிவித்துள்ளார். மேலும், மழையில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, உ.பி.யில் மீண்டும் புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை ஆஅய்வு மையம்   எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #UP #Thunderstorm
Tags:    

Similar News