செய்திகள்

நிர்பயா கொலை வழக்கு - மரண தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Published On 2018-05-04 12:54 GMT   |   Update On 2018-05-04 12:54 GMT
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் மரண தண்டனையை எதிர்த்து இருவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்டு, பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த கோரச் சம்பவம் தொடர்பாக முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேரும் ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டனர். சிறுவன் மீதான வழக்கு இளம் சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பினை 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து  வினய் சர்மா மற்றும் பவன் குப்தா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். 

இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, மனுதாரர்கள் மற்றும் டெல்லி போலீசாரின் எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தை வரும் செவ்வாய்க்கிழமை அன்று சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர். #tamilnews #nirbayarapecase #SCreservesorder 
Tags:    

Similar News