செய்திகள்

பீகார் பேருந்து தீவிபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி

Published On 2018-05-03 18:19 IST   |   Update On 2018-05-03 18:19:00 IST
பீகார் மாநிலத்தில் ஓடும் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாட்னா:

பீகார் மாநிலத்தின் சம்பாரன் மாவட்டத்தில் இன்று மதியம் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள மோதிஹரி என்ற பகுதியில் வந்த போது, பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் அந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதில் பயணித்த 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். 

தகவலறிந்து மீட்பு படையினர் அங்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பீகாரில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு துறை மந்திரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு துறை மந்திரி கூறுகையில், இந்த விபத்து மிகவும் துக்ககரமானது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். #Tamilnews

Similar News