செய்திகள்

ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு - ராகுல் காந்தி ஆஜராக கோர்ட் உத்தரவு

Published On 2018-05-02 16:21 IST   |   Update On 2018-05-02 16:21:00 IST
ஆர்எஸ்எஸ் தொடுத்த அவதூறு வழக்கில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிவண்டி கோர்ட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #RSS #Rahulgandhi
மும்பை:

கடந்த 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, பிவண்டியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது தன் கட்சியினருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு பேசிய அவர், ‘‘ காந்தியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் தான் கொலை செய்தனர்’’ என்றார். இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிர்வாகி ராஜேஷ் குண்டே என்பவர் பிவண்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராகுல் காந்தி தங்கள் அமைப்புக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கூறி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். 

இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 23-ம் தேதி ஆஜராக வேண்டும் என பிவண்டி கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. ஆனால் அன்றைய தினம் ராகுல் காந்தி தரப்பில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து வழக்கு விசாரணை மே 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 12-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். #RSS #Rahulgandhi #Tamilnews

Similar News